சென்னை:

மிழக முதல்வர் வீடு அமைந்துள்ள பகுதியிலேயே  மலை போல குப்பைகள் குவிந்துள்ள நிலையில், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கு நோய் பரவுவதாக தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வரின்   வீட்டுக்கு அருகிலேயே  மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடிவதாகவும் கூறினர்.

மேலும், இதுவரை   டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.