ஸ்திரேவியாவை மிரட்டி வரும் டெபி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் 300 கி.மீ வேகத்துடன் காற்று வீசும் என அரசு எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக புயலால் தாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் குயின்ஸ்லாந்து கடற்கரை பகுதிகளில் உள்ள ஊர்களில் இருந்து பொதுமக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

இன்று குயின்ஸ்லாந்தின்  வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4-ம் எண் புயற்காற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இது மிகவும் மோசமான புயல் என்று நிபுணர்களும், குயின்ஸ்லாந்து மாகாண தலைவர் அனாஸ்டேசியா பலாசுக்கும்
எச்சரித்துள்ளனர்.

இதன் புயல் எதிரொலியாக அபாட் பாயிண்ட் நிலக்கரி முனையம், மெக்காய் மற்றும் ஹே பாயிண்ட் துறைமுகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில் விமான நிலையம் மூடப்பட்டது. பல விமான நிறுவனங்கள்  தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.

கனமழை மற்றும் பயங்கரக் காற்றினால் அங்கு பயிராகும் வாழை மரங்களுக்கு கடும் சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 யாசி சூறாவளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவைத் தாக்கும் பயங்கரமான புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.