சென்னை:
மிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது.

இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் கூடியது. தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

இந்த கூட்டத்தொடர், மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.