கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுவரை கள்ளச்சாராயம் வியாபாரம் செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து பலர் மருத்துவமனைகளை நாடினார். ஆனால், போதைய மருந்து இல்லாமல் பலர் உயரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் புதுச்சேரி,சேலம் உள்பட பல மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். , 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40ஐ தாண்டிது. இந்த நிலையில், இன்று காலை 50 இருந்த பலி எண்ணிக்கை மதிய நேரத்திர் 52 ஆக உயர்ந்துள்ளத.
அதாவது, இன்று காலை 11 மணி நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் நேற்று மாலையே 27 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஆட்சியர் கூறியிருந்தார். எஞ்சியுள்ளவர்களுக்கும் படிப்படியாக நிவாரணத் தொகை ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது, மைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் ஆணையம், இச்சம்பவத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கேட்டறிந்தார் அதையடுத்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட தமிழக அரசு, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை தொடர்ந்து திமுக நிர்வாகி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி புதுச்சேரியை தேர்ந்த ஜோசப் என்கிற ராஜாவையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த சிபிசிஐடி, இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மாதேஷ் என்பவரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். விஷச் சாராய வியாபாரி முத்துவை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். கச்சராபாளையம் காவல் நிலையத்தில் வைத்து முத்துவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்