
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்த வர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான 26 வயது சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.
தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி கொழுக்குமலை வனப்பகுதியில், கடந்த 11ந்தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள், காட்டுத்தீயில் சிக்கினர். 39 பேர்கள் குழுவாக சென்ற நிலையில், 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்த நிலையில், 30 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் பேர் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவ மனை, அப்போலோ, மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் பலர் சென்னை , கோவை, ஈரோடு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் சிகிச்சை பலனளிக்காமல் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த தஞ்சாவூர் தஞ்சாவூர் எம்கே ரோடு கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் சாய் வசுமதி சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
26 வயது இளம்பெண்ணான சாய் வசுமதி எம்.சி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், சென்னை டிரெக்கிங் கிளப் மூலம் கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிச்சிக்க்கு சென்றபோது, காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
[youtube-feed feed=1]