ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்காத்தால் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, பலி எண்ணிக்கை 252 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாவா மாகாணத்தில், Cianjur, Cugenang இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 31 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் மற்றும் 377 பேர் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,060 ஐ எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.