கோலாலம்பூர்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ (வயது 54) என்பவர் 2014-ம் ஆண்டு டிசம்பரில் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்னுக்கு போதைப் பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஒரு கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் மரியாவுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார்.