நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.
ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சுஷாந்த் சிங் அவருடைய அறையில் மரணித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பலரும் பகிரவே, வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதள பயனர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.