நெட்டிசன்:

Dr.Safi –   Nagercoil 

*கேள்வியும்* ?  பதிலும்…

*என்ன மருந்து*?

சித்த மருந்து .

*எத்தனை நாள் மருந்து* ?

4 மாதம்  மருந்து !

*என்ன காரணத்தால் இறந்தார்* ??

கல்லீரல் ,கணையம் ,கிட்னி பாதிப்பால் இறந்தார் !

*சித்த மருத்துவர்தான் இதை கண்டுபிடித்தாரா*??

இல்லை , விஞ்ஞான மருத்துவர்கள் தான் கண்டுபிடித்தனர் ,!

*சித்த மருத்துவ படிப்பு என்பது என்ன* ?

BSMS எனும் இளநிலை சித்த மருத்துவ படிப்பு ,
மேலும் MD ( Siddha ) எனும் சித்த முதுகலை படிப்பில் ஏதாவது ஒன்று , சித்த மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்துடன் உள்ளது மட்டுமே சித்த மருத்துவ கல்வி ,

*இவர் சித்த மருத்துவர் சித்தா படித்தவரா*??

இல்லை RIMP எனும் சித்த அங்கீகாரமற்ற ஒரு படிப்பை பயின்றவர் ,

*எத்தனை நாட்களாய் மருத்துவம் பார்க்கிறார்* ?

25 வருடங்களாக பார்க்கிறார் ?!

*இவரை எப்படி மக்கள்  நம்புகின்றனர்* ??

மருத்துவம் படித்தவரை தவிர குரளி வித்தை காட்டும் அனைவரையும் நம் மக்கள் நம்புவர்.!!

*கொல்கத்தாவில் நடந்தது போல இந்த போலியை  மக்கள் அடிக்கவில்லையா* ??

இல்லை…!!
மக்களுக்கு தெரியுமே அவர் மருத்துவமே படிக்காதவர் என ,
பிறகு எப்படி அடிப்பர் !!

*அந்த போலி  மருத்துவர் மேல் வழக்கு தொடுத்து ,நஷ்ட ஈடு கேட்கவில்லையா* ??

இல்லை,

அவர் தான் மருத்துவர் இல்லையே ,

படித்த மருத்துவர் மேல் தான் கேஸ் போடுவது ,கட்ட  பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது எல்லாம்

*இவர்களிடம் சென்றால் அடி விழும் என்கிற பயம்* ,

*அவர் என்ன மருந்து குடுத்தாராம்* ??

அது தெரியலையாம் ,

அவராகவே மருந்து தயாரிப்பாராம் ,

அதை கொடுப்பாராம் , அந்த மருந்து என்ன என்பதை நவீன மருத்துவர்கள் ஆய்வு செய்து சொல்லனுமாம் !!

*மாதவிடாய் பிரச்சினைக்கு விஞ்ஞான மருத்துவத்தில் மருத்துவம் இல்லையோ* ??

இருக்காம் ,

அது ஹெவி டோஸ் ஆகி சைட் இபெக்ட் வந்துருமாம் ,

ஆனால் ,

இதில் உயிர் மட்டும் தான் போகுமாம் ..

*இந்த மாதிரி மருத்துவமனைகளுக்கு CEA  Approval , Biomedical waste certificate, Fire certificate , Stability certificate, Pollution certificate , Drug license certificate இதெல்லாம் கிடையாதா* ??

இதெல்லாம் படிச்ச நவீன விஞ்ஞான மருத்துவர்களுக்கு தான் ,

அவிங்க தான் இதெல்லாம் சொன்னதும் ஓடிபோய் வாங்கி வெச்சுக்குவாங்க ,

இவங்களுக்கெல்லாம் அதெல்லாம் கிடையாது ,

மருத்துவர் கிட்டயே certificate இல்ல , இதுல எங்க பில்டிங் , தீ அணைப்பு ,

இதெல்லாம் எதுக்கு ???

*இப்ப அந்த மருத்துவர் என்ன செய்யறார்* ??

சொகுசா , அதே மருத்துவமனையில் இருந்து மருத்துவம் பார்க்கிறார் ,

*எப்படி ….*??

அதானே சார் இந்தியா.