டில்லி:
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதற்காக காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதோடு வருமான வரி தாக்கல்கள் அனைத்தும் இந்த இணைப்புக்கு பின்னரே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு விபரங்களில் ஆதார் அல்லது அத்தாட்சி எண் குறிப்பிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel