டில்லி
ஐபில் 2019 ஆம் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது

ஐபிஎல் 2019 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் 39 ஆம் லீக் ஆட்டம் முடிவடைந்திருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன.
நேற்று நடந்த 40 ஆம் லீக் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது. அதனால் புள்ளிகள் பட்டியலில் முன்னேறிய டில்லி கேபிடல்ஸ் அணி முதல் இடத்துக்கு வந்துள்ளது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
Patrikai.com official YouTube Channel