பாட்னா:

வீட்டில் கழிப்பறை இல்லாததால் மருமகள் தனது மாமனார் மீது போலீசில் புகார் அளித்தார்.

பிகார் மாநிலம் முசாபர் மாவட்டம் தேகன் நியூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ஜோதி, தனது மாமனாரிடம் கழிவறை கட்டித்தர பல முறை கேட்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

இது குறுத்து மாமனார் மற்றும் கணவரின் தம்பி மீது போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், விரைவில் வீட்டில் கழிப்பறை கட்டித்தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததன் அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு வாரத்திற்குள் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என ஜோதி வலியுறுத்தினார். பணம் ஏற்பாடு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டனர். பின்னர் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புகாரை ஜோதி திரும்ப பெற்றார்.

[youtube-feed feed=1]