போபால்:
கடந்த 4 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியில் குற்ற விகிதம் 5% குறைந்துள்ளது.
மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் குற்ற அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த 4 மாத காலத்தில் குற்ற விகிதம் 5% குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் புள்ளிவிவரத்தை சமர்ப்பித்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியில் குற்ற விகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றம் மட்டுமின்றி, வன்முறைகளும் குறைந்துள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.