ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ரஜினி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. மும்பையை தொடர்ந்து ஜெய்ப்பூர் படப்பிடிப்பின் புகைப்படங்களும் லீக் ஆகியிருப்பதால் படக்குழு பேரதர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

[youtube-feed feed=1]