ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’.

பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிதாக ஏதும் பேசப்படவில்லை .

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘தர்பார்’ படத்தைத் திரையிடுகிறது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சி இதன் ஒளிபரப்பு உரிமையைப் பெரும் விலைக்குக் கைப்பற்றியுள்ளது.

இந்த 21 நாட்கள் ஊரடங்கும் முடிவடையும் தருணத்தில் இப்படத்தை ஒளிபரப்பி இதன்மூலம் டி.ஆர்.பியைக் கைப்பற்ற சன் தொலைக்காட்சி முடிவு செய்திருப்பது தெளிவாகிறது.

ரஜினி நடித்த படங்களிலேயே, வெளியாகிக் குறைந்த நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படம் ‘தர்பார்’ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]