இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் . சமூகவலைத்தளங்கள் தவிர டிவி தான் அனைவரையும் பொழுது போக்க வைத்துக்கொண்டிருக்கிறது .
இந்த தருணத்தைப் பயன்படுத்தி தங்களுடைய டி.ஆர்.பியை அதிகரித்துக் கொள்ள, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே தாங்கள் உரிமைப் பெற்றுள்ள ஹிட் படங்கள் அனைத்தையும் ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சி ஏப்ரல் 13 மற்றும் 14-ம் தேதி ‘காஞ்சனா 3’, ‘தர்பார்’, ‘சீமராஜா’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘இருட்டு’ ஆகிய ஐந்து படங்கள் ஒளிபரப்பியது .
ஏப்ரல் 14-ம் தேதி மாலை ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதன் முறையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், டி.ஆர்.பி அள்ளும் என எதிர்பார்த்த நிலையில் ‘காஞ்சனா 3’ படத்தை விட ‘தர்பார்’ படத்துக்கு டி.ஆர்.பி குறைவாகவே கிடைத்ததுள்ளது.
‘காஞ்சனா 3’ திரைப்படம் ஏற்கனவே கடந்தாண்டு தீபாவளிக்கு சன் டிவி ஒளிபரப்பியது. இந்த ஊரடங்கைக் கணக்கில் கொண்டு மீண்டும் ஒளிபரப்பு செய்தது. அதற்கு 15184 டி.ஆர்.பி புள்ளிகள் கிடைத்தது. இதற்குப் பிறகு ‘தர்பார்’ படத்துக்கு 14593 புள்ளிகள் கிடைத்துள்ளது.
ரஜினியின் ‘தர்பார்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மக்களிடையே எடுபடவில்லை. அதுவே, டி.ஆர்.பி புள்ளிகளிலும் எதிரொலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.