சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு திமுக தொடர்ந்த வழக்கில்,  மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசு சமீபத்திய குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திமுக எம்பி ராமலிங்கம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், அணைகள் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளன. அப்படி இருக்குபோது அணை பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, , மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.