புனே:
லித் இளைஞர் மூவர் சேர்ந்து மராத்தா  இன சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்தும், வன்கொடுமை சட்டத்தை நீக்கக்கோரியும் மராத்திய இனத்தவர் இன்று புனேவில் மாபெரும் அமைதி பேரணியை நடத்தினர்.
மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில், தலித் ஒருவர் தான் புதிதாக மோட்டார் பைக் வாங்கியதை கொண்டாடும் வகையில்,தனது உறவினர்களான இரு இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார். பிறகு மூவரும் சேர்ந்து, மராட்டிய இனத்தைச் சேர்ந்த 15 வயது மராத்தா இன சிறுமியை பலாத்காரம் செய்து,  கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டார்கள்.
இது மராட்டிய மாநலிம் முழுதும்  மராத்தா சாதியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
img-20160925-wa0032
சிறுமியை பலாத்காரப்படுத்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி இன்று புனேவில், மராத்தா இனத்தைச் சேர்ந்த பெண்கள் “மௌனப் பேரணி” நடத்த அழைப்பு விடுத்தனர்.
எந்தவொரு கட்சி சார்பும் இன்றி அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பேரணிக்கு சுமார் 5000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியில் கலந்துகொண்டார்கள்.
இது மராட்டிய மாநிலத்தில் பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது மராட்டிய மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் மாராத்தா இன பெண்கள் பேரணி, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மராத்தா இன பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த பேரணிகளில் – எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா இளம்பெண்ணை கற்பழித்த தலித் இளைஞர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும், மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும்” – என்கிற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.