நெட்டிசன்:  த. நா. கோபாலன் (tn gopalan) அவர்களின் முகநூல் பதிவு:
1
த் தேர்தல்களில் எத்தனை கட்சிகள் அருந்ததியரை வேட்பாளராகக் களமிருக்கியிருக்கின்றன எனக் கேட்டபோது  அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழகமத்தைச் சார்ந்த ஒருவர் தெரிவித்த கருத்து இவை:
தமிழகத்தில் எல்லாக் கட்சிகளுமே எங்க அருந்ததியர் மக்களை புறக்கணித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

திமுக அதிமுக கட்சிகள் தலா 3 அருந்ததியருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். ஆனால் இரண்டு முன்னணிக் கட்சிகளுமே தலா 40 க்கும் மேற்ப்பட்ட பள்ளர், பறையர் சமுதாய மக்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். தேமுதிக, காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுக்கு அருந்ததியர் சமுதாய மக்களைப் பற்றியான சமூகப் பார்வையில்லை. விசிக, புதிய தமிழகம் கட்சிகள் அவர்களின் (பள்ளர்,பறையர்) சமுதாய மக்களுக்கு மட்டுமே தனித் தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கிறது. கம்யுனிஸ்ட் கட்சிகளும் தேர்தல் நேரங்களில் அருந்ததியர் மக்களை புறக்கணித்து விடுவது வாடிக்கையாக உள்ளது. பிற சிறிய கட்சிகள் அருந்ததியர் மக்களைக் கண்டுகொள்வதில்லை.
புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், இந்தியக் குடியரசு கட்சி – சே கு தமிழரசன், சமூக சமத்துவப் படை – சிவகாமி அம்மா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்- ஜான் பாண்டியன் உள்ளிட்ட எல்லோருமே பள்ளர் ,பறையர் சமுதாயத்தை தலைமையாக கொண்ட தலைவர்கள். பள்ளர் பறையர் சமுதாய மக்களின் எழுச்சியைப் பார்த்து அனைத்து முன்னணிக் கட்சிகளும் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமுதாயம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும், தென் வட மாவட்டங்களில் பரவலாகவும் வசித்துவருகின்றனர். முற்றிலும் நிலமில்லாத எங்கள் மக்கள் விவசாயக் கூலிகலாகவும், தினக்கூலிகளாகவும், துப்புரவுத் தொழிலாளர்களாகவும், செருப்பு தைக்கும் சமுதாயமாகவும் தமிழகத்தில் சமூக அரசியல் பொருளாதார ரீதியாக அனைத்து சாதிகளாலும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக உள்ளது.”