புதுடெல்லி:
திபெத் சுதந்திரத்தை வலியுறுத்தப் போவதில்லை. சீனாவுடன் திபெத்தை இணைக்கவே விரும்புகின்றேன் என தலாய் லாமா தெளிவுபடுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பில் பேசிய திபெத் புத்த மத தலைமை பிட்சு தலாய் லாமா கூறும்போது,சீனாவும் திபெத்தும் அருகருகே அமைந்துள்ளன.
திபெத்தியர்களின் அறிவைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பொருளதார ரீதியாக சீனா உதவுகிறது.
கடந்த 1979-ம் ஆண்டு முதல் சீன தலைவர்களுடன் நான் நேரடித் தொடர்பில் உள்ளேன். எனினும் திபெத்துக்கு சுதந்திரம் கேட்கிறேன் என்று சீனா இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறது.
திபெத்துக்கு சுதந்தரம் தேவையில்லை. சீனாவுடன் இணைவதையே விரும்புகின்றோம் என்றார்.