மதுரை: பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப் பஎற்படுத்தி உள்ளது.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்தது தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார், பால்வளத்துறை கூடுதல் கமிஷனராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர், 1989ல் கூட்டுறவு சங்க மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பதவி உயர்வுகளுக்கு பின், 2019ல் பால்வளத்துறை கூடுதல் கமிஷனரானார். துவக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக் கான பதிவேடுகள் கொள்முதல் செய்தது தொடர்பாக தணிக்கை நடந்தது. அதில், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிறிஸ்துதாஸ், 1.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, அப்போதைய பால்வளத்துறை இயக்குனர் காமராஜ், அப்போதைய கமிஷனர் வள்ளலார் மற்றும் கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. உடன், கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, ஓய்வு பெற அனுமதித்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் கிறிஸ்துதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கிறிஸ்துதாஸ் மனுவை தள்ளுபடி செய்ததுடன் இந்த வழக்கில் அடுத்த 3 மாதங்களில் மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையை முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.
விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை மனுதாரருக்கு எதிராக மட்டுமின்றி, அப்போதைய இயக்குனர் காமராஜ், கமிஷனர் வள்ளலார் மீதும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள், காமராஜ், வள்ளலார் மீதான நடவடிக்கையை, 2023ல் பொதுத்துறை, ‘சிறப்பு- ஏ’யின் கடிதம் மூலம் அரசு கைவிட்டுள்ளது. ஆனால், மனுதாரர் இரண்டாம் நிலை அதிகாரி. கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடு களை வழங்குவதில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் இயக்குனர் மற்றும் கமிஷனரின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினார். அப்படி இருக்கும்போது, மனுதாரர் மட்டுமே இதில், பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மனுதாரர் மீது எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. அவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தெளிவாக உள்ளது.. இவ்வழக்கு புகாரில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.