சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சாமு.நாசர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் பால் பண்ணையிலிருந்து விநியோகஸ்தர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால்பாக்கெட் வண்டியை சோதனை நடத்தியதில் கூடுதலாக எடுத்து வரப்பட்ட ரூபாய் இரண்டாயிரத்தி 484 ரூபாய் மதிப்புள்ள 106 பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கொரட்டூரில் பால் வண்டியை வழிமறித்து அமைச்சர் சாமு.நாசர், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel