சென்னை: சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது.

சென்னையில் தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 11 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் மேலும் 2 மண்டலங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. இதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு மண்டலங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதை கண்டித்து, அவ்வப்போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 10ந்தி அன்று சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டங்களை காவல்துறை மூலம் தமிழ்நாடு அரசு தடுத்தும், கைது செய்தும் வருகிறது.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக 1.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. பெரும்பாலான பகுதிகள், அதாவது 80 சதவிகிதம், தனியாருக்கு குத்தகைக்கு விடுக்கப்பட்ட நிலையில், தினசரி 10ஆயிரம் பேருக்கு இலவச உணவு என்று சென்னை மாநகராட்சி கூறியிருப்பது விவாதப்பொருளாக மாறி உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எதுக்கு இலவச உணவு வழங்க வேண்டும், அதை அந்நிறுவனம்தானே மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், சென்னை மாநகராட்சி அதை பொருட்படத்தால், தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் வகையில், . மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து தினசரி 10,000 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதறக்ன சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.