சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இந்தப் படத்தில், சுதீப், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வருகிற டிசம்பர் மாதம் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 இந்திப் படங்களை பிரபுதேவா இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சல்மான் கானே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘தபங் 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சல்மான் கான் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.