பரிமலை

நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கல் கூட்டம் அதிகரித்து வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தன தலைவர் கூறி உள்ளார்.

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம்.

”இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு கடந்த 29 நாட்களில் ரூ.163 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரத்து 204 வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.22 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரத்து 481 கூடுதலாகும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.141 கோடியே 12 லட்சத்து 97 ஆயிரத்து 723 வருமானம் கிடைத்திருந்தது. சபரிமலைக்கு தற்போது பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தரிசனத்திற்கு 22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் பக்தர்களின் வருகை 18 லட்சத்து 16 ஆயிரத்து 913 ஆக இருந்தது. இந்த ஆண்டு 4 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். மேலும் அரவணை விற்பனை மூலம் ரூ.82 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரத்து 50 கிடைத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட ரூ.17.41 கோடி கூடுதலாகும்.”

எனத் தெரிவித்துள்ளார்