சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 .

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் கிருஷ்ணகுமார் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தனர். அதன்படி, நாளைக்காலை (ஜுலை 28) 11 மணிக்கு படத்தின் பர்ட் லுக்கை வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.