2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘தீ’.

ஸ்ரீனு வைட்லா இயக்கிய இப்படம் தமிழிலும் வினய், சந்தானம் நடிப்பில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.

ஸ்ரீனு வைட்லா இயக்கும் இப்படத்திலும் விஷ்ணு மஞ்சுவே நடிக்கிறார். இப்படத்துக்கு ‘டி அண்ட் டி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தை விஷ்ணு மஞ்சுவின் 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. மஹதி ஸ்வரா சாகர் இசையமைக்கும் இப்படத்தின் கதையை கோபி மோகன் எழுதியுள்ளார்.

 

[youtube-feed feed=1]