சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மத்தியஅரசு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை கட்டுப்படுத்தி விட்டு, வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் அத்தியாவசியத் துறைகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]