சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி (LPG) விநியோகம் செய்வதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வலியுறுத்தி, ந்திய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின கடிதம் எழுதி உள்ளார்.
மற்றொரு கடிதத்தில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகத்தைக் குறைப்பது தொடர்பான விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் HardeepSPuri அவர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
