டில்லி:

மீப காலமாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையும்  வரலாறு காணாத அளவுக்கு உயர்வு பெற்றுள்ளது. இது பொதுமக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டு ஒன்றுக்கு 12 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைப்படின், சந்தை விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம். நாடு முழுவதும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் எரிவாயு சிலிண்டரையே நம்பி உள்ள நிலையில், தற்போது அதிரடியாக எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தினசரி அதிகரித்து வந்தது. இதற்கு அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக, பெட்ரோல் டீசல் வலையில்  நாள் ஒன்றுக்கு 1 பைசா, 7 பைசா என குறைத்து மத்திய அரசு நாடமாடி வருகிறது.

இந்த நிலையில், அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது.  உள்நாட்டு திரவ எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 2.34 என்றும், சிலிண்டருக்கு 48 ரூபாயாகவும்  அதிகரித்துள்ளது. ‘

டில்லியில்  சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 493.55, ஆகவும்,  கொல்கத்தாவில், 496.65 என்ற விலையிலும்,  மும்பையில் 491.31 ஆகவும், சென்னையில் 481.84 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம் எரிவாயு சிலிண்டர் விலை விலை ரூ. 493.55 என்றும், மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.698,50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல  உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர்  விலை ரூ.1244,50 ஆக உயர்ந்துள்ளது.

இந்த திடீர் சிலிண்டர் விலை உயர்வு பெண்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.