சென்னை: டிட்வா புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தி யிருக்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தென்சென்னை மாவட்டத்தில்,சமூக நலத்துறையின் சார்பில்,திறன் பயிற்சி (அழகுகலை) முடித்த 10 திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தலா ரூ. 50,000 மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அழகுகலை முடித்த 10 திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தலா ரூ. 50ஆயிரம் மானியம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, புயல் எச்சரிக்கையை எதிர்கொள்ள தமிழ்நாடுஅரசு தயாராக உள்ளது என்றவர், அரசு மருத்துவ மனைகளில் முழு நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க அறுவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், 1.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தறபோது, மருத்துவத்துறையில் காலிப் பணியிடமே இல்லை என்ற நிலை உள்ளது. அதனால் புயல் பாதிப்பு மற்றும் அவசர தேவைக்காக எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார். அதுபோல, ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழு நேரம் மின்சாரம் தடைபடாமல் வருவதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் மருத்துவமனையில் தண்ணீர் வரும் என்ற நிலை பெரும்பகுதியான மருத்துவமனைகளில் தற்போது இல்லை என தெரிவித்தார்.
மேலும், மழை காரணமாக காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறியவர், ஓரிரு பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலே, காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”. மழைத்தொடங்கிய பிறகு ஏதாவது பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.