சென்னை: இலங்கையை சின்னாபின்னமாக்கிய டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளது. மேலும் அவசர தேவைக்கு 1913 உதவி எண்ணை அழைக்கவும் கூறியுள்ளது.
‘‘டிட்வா புயல் காரணமாக இன்று காலை முதல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும். மணிக்கு 55 கிலோ மீட்டர் தொடங்கி 80 கிலோ மீட்டர் வரை தரைக்காற்று வீசத் தொடங்கும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புயல் மழையின் போது ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள செய்தி குறிப்பில், புயல் மற்றும் கனமழையையொட்டி சென்னை மாநகராட்சி பள்ளிகள், சமூக மையங்கள், கல்யாண மண்டபங்கள் என 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு 111 சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழும் மரங்களை அகற்ற 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ள சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர், பெருங்குடி, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் தலா 25 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு சில அறிவுரைகளையும் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறும், கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
புயல் மழையின் போது ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, தாழ்வான இடங்களில் வாழும் முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள், புகாருக்கும், உதவிக்கும் 1913 என்ற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில், ‘வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது,சென்னைக்கு தென் கிழக்கே 450 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் இலங்கியை சூறையாடிய நிலையில், தற்போது தமிழக கடற்பகுதியை நெருங்கி உள்ளது.
இதன் கடலோர மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் மழையின்போது மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் மாநகராட்சியின் கட்டணமில்லா உதவி மைய எண் 1913ஐ தொடர்பு கொள்ளலாம் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல் வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.