ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ளது.

வரலாறு காணாத இந்த புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.