சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் வரும் 30ம் தேதி சென்னை அருகே கரையை கடக்கும், இதன் காரணமாக சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என வெதர்மேன் எனப்படும்தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ‘ஃபெங்கல்’ புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையில், புயல் மற்றும் மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் நவம்பர் 30 ம் தேதியன்று பரங்கிமலை மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும்.
சென்னைக்கு தெற்கே காற்றழுத்தம் நகர்ந்து வருவதால், சென்னையின் நீர்ப்பிடிப்புக்கு ஏற்ற மழையாக இது அமையும்
27-ம் தேதி – சென்னையில் லேசானது முதல் மிதமான மழை – வடக்கு நகர்வு
28-ம் தேதி – சென்னைக்கு நாளை மிதமான மழை – வடக்கு நகர்வு
29 – சென்னைக்கு கனமழை – மேற்கு நகர்வு
30-ம் தேதி – சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை – மேற்கு நகர்வு
டிசம்பர் 1 – சென்னையில் மிதமான மழை – இழுபறி விளைவு
டிசம்பர் 2 – சென்னையில் மிதமான மழை – இழுபறி விளைவு
“காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் கரையை கடந்த பிறகு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மழையை அனுபவிக்க முடியும்,”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.