சிட்னி:
ஆஸ்திரேலியாவை “டெபி புயல்” கடுமயாக வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
உலகிலேயே மிகப்பெயரி தீவு நாடு (கண்டம்) ஆஸ்திரேலியா. அடிக்கடி ஆஸ்திரேலியாவை புயல் தாக்கும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை “டெபி புயல்” என அழைக்கப்படும் படுப்பயங்கரப் புயல் இன்று தாக்கத்துவங்சியது. மணிக்கு 300கி.மீ வேகத்தில் புயல் வீசி வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, ஏர்லி கடற்கரை, ஹாமில்டன் தீவு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலை மற்றும் விமானப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் கடும் சேதமடைந்துள்ளன. அங்கு நான்காம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.