சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் உலக நகரங்களில் டெல்லிக்கு 5வது இடம்… ஆய்வு தகவல்…

Must read

டெல்லி: சைபர் தாக்குதலை அதிக அளவில்  எதிர்கொள்ளும் உலக நகரங்களில் டெல்லி 5வது இடத்தை பிடித்துள்ளதாக சுபெக்ஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

டெல்கோக்களுக்கான என்எஸ்இ-பட்டியலிடப்பட்ட டிஜிட்டல் சேவை வழங்குநரான சுபெக்ஸ் நிறுவனம் பெங்களூரில் அமைந்துள்ளது. சுபெக்ஸின்சமீபத்திய ஆய்வுகளின்படி கடந்த   2020 ஆம் ஆண்டில் இந்திய சைபர் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்து உள்ளதாகவும், இதில் டெல்லி 5வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தும் ஹேக்கர்கள்,  கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்தியாவின் திறன்கள் மற்றும் தயாரிப்பு ஆலைகள் குறித்த தகவல்களை திருடும் நோக்கில் அதிக அளவிலான தாக்குதல்களை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் முதலிடத்தில் வாஷிங்டன் டி.சி, 2வது இடத்தில் லண்டன்,  3வது இடத்தில் நியூயார்க் , 4வது இடத்தில் சிங்கப்பூர் உள்ளன.  5வது இடத்தில் இந்திய தலைநகரமான டெல்லி இடம்பெற்றுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை குறித்து கூறிய டிஜிட்டல் நெட்வொர்க் சேவை இயக்குநர் கிரண் சக்கரியா,”இந்திய உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்கள் 91% அதிகரித்துள்ளது, ஹேக்கர்கள் இந்திய தொழில் நிறுவனங்களின் IP டேட்டா தகவல்களை சீர்குலைத்தலை குறிக்கோளாகக் கொண்டிருகின்றனர்.இதன்மூலம் இந்தியாவில் தடுப்பூசிகளின் உற்பத்தி திறன்கள் மற்றும் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய உற்பத்தி ஆலைகள் பற்றி அறிய ஹேக்கர்கள் ஆர்வம் காட்டுவது உறுதியாகியுள்ளது, இது நாட்டின் உற்பத்தித் துறையை கண்காணித்து, பின் தாக்குதல் நடத்துவதற்கு செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது.எனவே இந்தியாவில் டிஜிட்டல் நெட்வொர்க்கின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

More articles

Latest article