நவீன டிஜிட்டல் யுகத்தில் நமது இணைதயள கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், இன்னும் பாஸ்வேர்டடை மாத்தாமலேயே ஏராளமானோர் உள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனைச் சேரந்த National Cyber Security Centre (NCSC) வெகு எளிதாக கண்றியக்கூடிய மற்றும் யூகிக்கக்கூடிய கடவுச்சொல்லை( பாஸ்வேர்டு) தான் பயன்படுத்துவாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
NCSC நடத்திய தன் ஆய்வில் மக்கள் பயன்படுத்தும்சொல்லில் 1234578 மற்றும் பெயருக்குப் பின்னர் 123,321 உதாரணம் : Michael1, Daniel2, Jessica2 and Charlie3 போன்றே தங்கள் கடவுச்சொல்லை கொடுத்துவருகின்றனர். ஆனால் இது எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. அது மட்டுமில்லை அவர்களின் தொலைபேசி எண் / பிறந்தநாள் மாதம், தேதி போன்றவற்றை கடவுச்சொல்லாகக் கொடுத்தால் வெகு எளிதாக ஹேக்கர்கள் உங்கள் மின்னஞ்சல்முகவரியை கைப்பற்றிவிடுவார்கள்.
எளிதாக யூகிக்கக்கூடிய கடவுச்சொல்லை கொண்டு அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்கலாம், அதிலிருந்து போலியாக மடல்களை அனுப்பலாம், வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றலாம். இப்படி நிறைய செய்யமுடியும்.
இது மின் உலகம் இந்த உலகத்தில் உள்நுழைய நமக்கு மின்னஞ்சல் முகவரி தான் நுழைவாயில், நுழைவாயி லில் உள்நுழைய கடவுச்சொல்தான் சாவி, இந்த சாவியை பொதுவாக அனைவருக்கும் கிடைத்தால் உங்கள் அடையாளமே உங்களுக்கு இல்லாதபடி செய்துவிடுவார்கள் எனவே கவனமாக உங்கள் கடவுச்சொல்லை பாதுக்காப்பாக வைக்கலாம்.
நம் தமிழ் மக்கள் தமிழிலயே கடவுச்சொல்லை வைக்கலாம், உதாரணம் சங்க இலக்கியங்கள், சங்கப்பூக்கள், சங்ககால பாடலாசிரியர்கள் போன்றவர்களின் கடவுச்சொல்லை கொடுத்தால் சற்று எளிதாக தப்பிக்கலாம், இன்னொரு விசயம் உங்கள் பெயருடன், உங்கள் செல்பேசி எண், பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்றவற்றை கொடுக்காதீிர்கள்.
NCSC ன் தொழில்நுட்ப இயக்குநர் ஐயான் ஹெவி ’’ பெரும்பான்மையானோருக்கு கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்றே தெரியவில்லை, தங்களின் முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக வைக்க வலிமை யான கடவுச்சொல் அவசியம், ஆனால் மக்களோ தாங்கள் எளிதாக மறந்துபோகாத எண்/பெயர்களையே பாதுகாப்பு என்று நினைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். எனவே உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக வையுங்கள்
-செல்வமுரளி