வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான். அதிக மக்கள் தொகையுள்ள சீன நாட்டில் அவர்களுக்கென தனி உரையாடல் செயலிகள் உண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள  உரையாடல் மற்றும் தொடர்பு செயலிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தான். அதற்கு அடுத்து டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தங்களது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் பல வசதிகளை தனது வாட்ஸ்அப் செயலிகளில் மேம்படுத்திவருகிறது. சமீப காலக்கட்டங்களில் வாட்ஸ்அப் ன் பல்வேறு வசதிகள் பற்றிய செய்தியினை நீங்கள் பத்திரிக்கை.காம்  இல் படித்திருக்கலாம். அவற்றில் குறிப்பட்டத்தக்க பல்வேறு புதிய வசதிகளை இப்போது பார்க்கலாம்

Whatsapp Locked

Whatsapp Locked வசதி ஏற்கனவே ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டு விட்டது. ஆன்டிராய்டில் சோதனை பதிப்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ்அப் பயன் படுத்தபடாத போது வாட்ஸ்அப் திரை தானாகவே பூட்டப்பட்டுவிடும், அவ்வாறு பூட்டப்படும் நேரத்தினை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்

திரை பிரதி தவிர்த்தல் ( ஸ்கிரி்ன் சாட் பிளாக்)

பயோமெட்ரிக் பாதுகாப்பினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம்  உங்கள் வாட்ஸ்அப் உரையாடலைக் கூட யாரும் ஸ்கிரின்சாட் (திரைபிரதி) எடுக்க முடியாது.

பகிரப்பட்ட சேதியின் எண்ணிக்கை விபரம் – Forwarded Message info

நாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் செய்தியின் பிரபலத் தன்மையை அறிந்துகொள்ளலாம்

வாட்ஸ்அப் குரல் – Voice

வாட்ஸ்அப் குரல் வசதியின் மூலம் நம் அனுப்பவிருக்கும் குரலை முதலில் கேட்டுவிட்டு பின்னர் அனுப்பலாம். இப்போதுவரை உள்ள வசதி என்னவென்றால் குரலை பதிவு செய்து அப்படியே அனுப்ப முடியும்.ஆனால் புதிய வசதியில் நாம் பதிவு செய்த குரலை சோதித்து பின் அனுப்பலாம், அதோடு மட்டுமல்ல தொடர்ந்து 30 குரல் வழி கோப்புகளை அனுப்பவியலும்

இருட்டுத் திரை – Dark Screen

இருட்டுத் திரை என்பது இரவில் அதிகமாக கண்ணுக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் வண்ணங்களைக் கொண்டு இருக்கும்.

தானாகவே ஒலிக்கும் குரல் (Autoplay Sound Files)

வாட்ஸ்அப் ல் நண்பர்கள் தொடர்ந்து  குரல் வழி கோப்புகளைக் அனுப்பும்போது ஒவ்வொரு குரல் கோப்பையும் நாம் பிளே பட்டனை சொடுக்கி கேட்கவேண்டும். ஆனால் வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய வசதியில் ஒரு குரல் கோப்பு முடிந்தவுடன் அடுத்த குரல் கோப்பு தானாகவே ஒலிக்க ஆரம்பித்துவிடும்

வாட்ஸ்அப் திரையிலயே இதர செயலிகள் ( Multiple Screen in Whatsapp)

வாட்ஸ்அப் ல் அனுப்பு யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணைப்புகளை நீங்கள் அங்கே சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.மாறாக வாட்ஸ்அப் திரையிலயே மேற்கண்ட செயலிகள் இயங்கும் வண்ணம் வசதியை கொடுத்து இருக்கிறார்கள்

வௌித்தள இணைப்பு (InApp Browser)

இந்த வௌித்தள இணைப்பு மூலம்  உங்களுக்கு வரும் இணையத்தள விபரங்களை நீங்கள் உங்கள் பிரவுசரில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.மாறாக உங்கள் வாட்ஸ்அப் செயலிக்குள்ளே அந்தத்தளம் திறக்கப்பட்டு விடும். இதனால் உங்கள் நேரம் மிச்சமாகும். உங்கள் செல்போன் நினைவகத்திற்கும் அதிக பளு இருக்காது

ஜிப் அனிமேசன் ஒத்திசைவு – Gif Animation Support

ஸ்டிக்கர் படங்களை கொடுத்து வந்த வாட்ஸ்அப் இனி சிறு சிறு காணொளி  காட்சிக்களை ஜிப் பைல் வழியாக நமக்கு இயங்கக்கொடுக்கும் ,

படத்தகவல் சரிபார்ப்பு – Fake Image Verification

நமக்கு வரும் படங்கள் குறித்த விபரங்களின் உண்மைத்தன்மையை நீங்கள் வாட்ஸ்அப் லியே சரி பார்க்கமுடியும். இதற்கு  கூகிள் நிறுவனத்தின் சேவைகளை வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்துகிறது

-செல்வ முரளி