டெல்லி: பரபரப்பான சூழலில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 22ம் தேதி கூடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் வரும் வெள்ளியன்று காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், வரும் 26ம் தேதி நடத்தப்பட உள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள், உள்கட்சி தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட உள்ளதால், அப்போது எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.