சி.வி.குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாயவன்’.
இந்த திரைப்படத்தை சி.வி.குமார் தயாரித்து இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘மாயவன்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடிய உத்வேகத்தை சி.வி.குமாருக்கு தந்துள்ளது. இது தொடர்பாக சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எங்களுக்கு பிடித்த மாயவன் நிலத்தின் மீது இறங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மாயவன் தொடர்ச்சியை #MaayavanReloaded ஆகப் பெறுவதற்கான இந்த புதிய முயற்சிக்கு நம்மைத் தூண்டியது ரசிகர்களின் நிபந்தனையற்ற பாராட்டும் ஆதரவும் ஆகும். மேலும் இது குறித்த மற்ற அப்டேட்கள் ஏப்ரல் 14ம் தேதி இருக்கும்’ என தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]