கொல்கத்தா: உள்துறை அமைச்சர் ‘அமித் ஷாவின் தலையை வெட்டி டேபிளில் வையுங்கள்’ திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அமைச்சர்மீது வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசிய அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தொழிலதிபர்களிடம் பணம் பெற்று பேசிய திரிணாமுல் எம்.பி. மஹுவா மொத்ரா, சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞரும் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான 65வயது  பினாகி மிஸ்ராவை திருமணம் செய்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்,  மேற்குவங்க மாநிலத்தில்,  வங்கதேசத்தவர்கள் அதிக அளவில்  ஊடுருவி வருவதாகவும், இதற்கு மம்தா அரசு துணைபோவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்தார்- இதற்கு பதில் அளிக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதனையடுத்து மொய்த்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் கிருஷ்ணநகர் எம்.பியான மொய்த்ரா பங்கேற்றிருந்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடுருவல் பிரச்சினையை கையாளாததற்கும், திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை குற்றம் சாட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தியாவின் எல்லை ஐந்து படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் நேரடி பொறுப்பு. ஆக தோல்வி யாருடையது?” என்று கேள்வி எழுப்பிய மொத்ரா,  அமித்ஷாவின் தலைவை வெட்டி எடுத்து வந்த எனது டேபிளில்வையுங்கள் என  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அவரது திமீர் பேச்சு வைரலானது.

அவரது பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.  இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மேற்குவங்க மாநிலத்தில் மத்தான தலைமையிலான அரசு காட்டாட்சி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரது எம்.பி.யின் திமுர் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மொய்த்ரா மீது கோட்வாலி காவல் நிலையத்தில் சந்தீப் மஜும்தார் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரியதாக வெடித்திருக்கும் நிலையில், மொய்த்ரா வெளிப்படுத்திய “வெறுக்கத்தக்க” மற்றும் ” ஆட்சேபனைக்குரிய” கருத்துகள் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலையை பிரதிபலிக்கின்றன என்று பாஜக விமர்சித்திருக்கிறது.

இது குறித்து மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தனது ‘ட்ரோல் செல்’ மூலம் ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதை சமூக ஊடகங்களில் வைரலாக்குகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

என் தலைமுடியைக் கூட தொட முடியாது : மஹூவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!

50 வயதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 65 வயதான முன்னாள் எம்.பி.யுடன் ஜெர்மனியில் ரகசிய திருமணம்