அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் கிளையில் ஆர்டரை மாற்றி கொடுத்த மேனேஜர் முகத்தில் பர்கரை தூக்கி கஸ்டமர் ஒருவர் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவருக்கு கொடுக்கப்பட்ட பார்சலில் அவர் கேட்ட உணவு இல்லாததால் நேரடியாக உணவகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அவரை அந்த கடையின் மேனேஜர் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் பார்சலில் இருந்த பர்கரை தூக்கி மேனேஜர் முகத்திலேயே அடித்துள்ளார். இருவருக்கிடையே நடைபெற்ற சண்டை அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel