மேற்கு வங்கத்தில் இருக்கும் சல்போனி கரன்சி அச்சகத்தில் பணி செய்யும் பணியாளர்கள் இனி 9 மணிநேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். டிசம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு ஓய்வின்றி உழைத்ததால் பலரது உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நோட்டுத்தடைக்குப் பின்னர் புதிய நோட்டுகளை அச்சடித்து பணத்தட்டுப்பாட்டை சமாளிக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
திரிணமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர் அதிகாரி, சல்போனி மற்றும் மைசூர் கரன்சி அச்சகங்களில் பணிபுரியும் பல பணியாளர்கள் கடுமையான உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த டிசம்பர் 14 முதல் அச்சக பணியாளர்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனர். இச்சூழலை சமாளிக்க அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்தும்படி கோரிக்கை விடுத்தோம் ஆனால் அதற்கு நிறுவனம் செவிமடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சல்போனி அச்சகத்தில் 700 பணியாளர்கள் கடுமையாக தினமும் உழைத்து வருகின்றனர்.
Currency Printing Press Workers Refuse To Do Overtime After Falling Sick From Overworking