
டில்லி
பணமதிப்பிழப்பிற்கு முன்பிருந்ததைப் போல தற்போது 98.94% நாட்டில் பணப்புழக்கம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
சமீபத்தில் ரிசர்வ் வங்கி இந்தியாவின் பணப் புழக்கத்தை குறித்து ஒரு அறிக்கை அளித்துள்ளது. அதில் தற்போது பணமதிப்பிழப்பிற்கு முன்பிருந்ததை போலவே பணப்புழக்கம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதிக மதிப்பிலான ரூ. 500 மற்றும் ஆயிரம் நோட்டுக்கள் செல்லாது என ஆறிவிக்கப்பட்டது. அப்போது மக்களிடையே புழக்கத்தில் ரூ.17.97 டிரில்லியன் அளவிலான பணம் புழக்கத்தில் இருந்தது. அதாவது 17,97,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் குறைந்தது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று நாட்டில் மக்களிடையே ரூ. 8,98,000 கோடி மட்டுமே பணம் புழக்கத்தில் இருந்தது. அதன் பிறகு அது சிறிது சிறிதாக அதிகரித்தது. தற்போது மக்களிடையே முன்பு இருந்ததைப்போல 98.97% பணப் புழக்கம் உள்ளது. அதாவது தற்போதைய பணப் புழக்கம் 17,78,000 கோடியை எட்டி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.