டெல்லி:

கொரோனா அறவே இல்லாத பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.  மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்பது குறித்தும் தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சத்தித சுகாதாரத்துறைச் செயலாளர்,  “கடந்த 28 நாளில் 12 மாவட்டங் களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும்,  “23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை” என்றும் கூறினார். இந்த பசுமைப் பகுதிகளில் விரைவில் ஊரடங்கு தளர்த்தப்படும்.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1409 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில்,  எலக்ட்ரிகல் கடைகள், பாடப்புத்தக விற்பனை கடைகள், ரீசார்ஜ் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்து உள்ளது.