சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இது 23ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலானது. அதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அமலில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து ஊரடங்கு குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ந நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.