”தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு” என்று ஸ்வீடன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்திருப்பதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகிவிருகிறது.
a
அந்த செய்தி இதுதான்:
“தயிர் சாதம் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஜெர்மனியி்ல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பசு மாடுகள் முன்பு மாதிரி சுதந்திரமாக மேயாமல் செயற்கை தீவனம் கொடுத்து வளர்க்கப்படுவதால் அதில் உள்ள உடலை கெடுக்கும் கெமிக்கல்கள் பாலில் சுரந்து பிறகு தயிராகும் போது வேதியல் மாற்றம் நடந்து உயிரை குடிக்கும் எமனாகிறதாம்.
கூடுதலாக
தயிர் சாதம் சாப்பிடுவதால்
ஆண்மை குறைவு
உயிரணுக்கள் குறைவு
கல்லீரல் பாதிப்புகள்
சிறுநீரக செயலிழப்பு
முடி கொட்டுதல்
இதய நோய்கள்
மூளைக்கோளாறு
மன வியாதிகள்
மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகிறதாம்.
மேலும்
பசுவின் தயிர் சாதத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வன்முறை குணமும் அதிகம் ஏற்படுகிறதாம். இதை ஸ்வீடன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள்” என்கிறது அந்த பதிவு.
அதே நேரம் வேறு ஒரு கருத்தும் நிலவுகிறது:
“சனீஸ்வரர் கோயில் இருக்கும் திருநள்ளாறு பகுதிக்கு மேல் செயற்கைகோள்கள் கடக்கும்போது, லேசாக ஆட்டம் காண்கின்றன,  பாக் ஜலசந்தியில் ராமர் அமைத்த பாதை கடலுக்கடியில் நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது” என்றெல்லாம் ஆதாரமில்லாத தகவல்கள் பல சமூகவலைதளங்களில் உலவுகின்றன.  அதே போல சமீபத்தில், “அசைவம் சாப்பிட்டால் உயிருக்கு கேடு, வன்முறை எண்ணம் அதிகரிக்கும்” என்ற ஒரு ஆதாரமில்லாத தகவல்  பரப்பப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “தயிர் சாதம்” ஆபத்து என்ற தகவல் சிலரால் பரப்பப்படுகிறதோ என்னவோ..”  என்று ஒரு கருத்து நிலவுகிறது.
தயிர், உடலுக்கு நல்லதா, கெடுதலா என்று, சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களிடம் கேட்டோம். அவர்,  “தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்பு, இதய நோய் போன்றவை ஏற்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
ஆனால் பொதுவாக தயிர் என்பது உடலுக்கு கேடுதான்.  இது  கொழுப்பு நிறைந்த பொருள். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் மலச்சிக்கல், மார்புச்சளி  சளி உண்டாம்.  உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.  உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும். ஆகவே மனிதர்கள், தயிரைத் தவிர்ப்பது நல்லதே” என்றார்.