டெல்லி: மத்திய கல்வி நிறுவனங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர் கியூட் பொது நுழைவுத் தோ்வை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வ முடிவுகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டடு மாதம் முடிவடைந்தது
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வரும் 15ஆம் தேதி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இல்லையென்றால், அடுத்த ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். ம
முன்னதாக மத்திய பல்கலைக்கழகங்களில நடத்தப்படும் கியூட் நுழைவுத் தோ்வில் பங்கேற்பதாக 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் பங்கேற்றிருந்த்து குறிப்பிடத்தக்கது.