மனித வரலாற்றில் 50 லட்சம்பேர் ஒரேநேரத்தில் பங்குபெற்ற 7-வது மிகப்பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. சிகாகோ கப்ஸ் பேஸ்பால் அணியின் வெற்றியை கொண்டாட கூடிய இந்த மாபெரும் கூட்டம் கடந்த 1994-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ராட் ஸ்டூவர்ட் நடத்திய இசைநிகழ்ச்சியின் சாதனையை முறியடித்தது. அதில் 35 லட்சம் பேர் பங்கு பெற்றனர்.
சிகாகோ கப்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பேஸ்பால் அணியாகும். இந்த அணிக்கு அங்கு லட்சக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய ஜனக்கூடுகைகள்:
1. 2013 கும்பமேளா, இந்தியா – 3 கோடி
2. அர்பாயீன் திருவிழா, ஈராக், 2014 – 1.7 கோடி
3. அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம், இந்தியா 1969 – 1.5 கோடி
4. அயத்துல்லா கோமேனியின் இறுதி ஊர்வலம், ஈரான் – 1 கோடி
5. பிலிபைன்ஸில் போப் தலைமையில் நடைபெற்ற கூடுகை 2015 – 60 லட்சம்
6. உலக இளைஞர் தினம் 1995 – 50லட்சம்
7. சிகாகோ கப்ஸ் வேடர்ட் சீரிஸ் கொண்டாட்டங்கள் – 50 லட்சம்
8. கமால் அப்டெல் நாசரின் இறுதி ஊர்வலம், 1970 – 5 மில்லியன்
9. ராட் ஸ்டெவர்ட் இசை நிகழ்ச்சி – 35 லட்சம் பேர்
10. ஹஜ் யாத்திரை, மெக்கா 2012 – 30 லட்சம்
11. போருக்கு எதிரான ஊர்வலம், ரோம் 1003 – 30 லட்சம்