பஞ்சாப் அணியுடனான இன்றைய டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி இந்த இலக்கை 13 ஓவரில் எளிதாக எட்டியது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த போதும் போட்டி முடிவில் தனது காதலிக்கு மோதிரத்தை நீட்டி காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார் காதலியின் மனதை மட்டுமன்றி சமூக வலைத்தளத்திலும் ஸ்கோர் செய்து வருகிறார்.